தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் முதன்முறையாக பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக மாறினார்.
ராஜ்கிரணை கதாநாயகனாக்கிய இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் பேசிய ராஜ்கிரண், தனுஷ் நினைத்தால் ரஜினிகாந்தையே இயக்கியிருக்கலாம். ஆனால் என்னை கதாநாயகனாக்கியிருக்கிறார். அவர் அப்பா கஸ்தூரி ராஜா தான் என்னை ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.
அதேபோல என் மருமகன் தனுஷ் என்னை மீண்டும் கதாநாயகனாக்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
0 comments:
Post a Comment