தனுஷ் படம் என்றால் அனிருத் தவறாமல் இடம்பெறுவார் என்ற ஒரு கோலிவுட்டில் விதி இருந்தபோது, எவரும் எதிர்பாராத வகையில் சந்தோஷ நாராயணனுடன் கூட்டணி அமைத்துள்ளார் தனுஷ்.
இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள கொடி படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ் முதன்முறையாக இருவேடங்களில் நடித்துள்ளார்.
பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இதில் தனுஷ் ஜோடியாக த்ரிஷா, ‘பிரேமம்’ அனுபமா பரமேஸ்வரன் இருவரும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் முக்கிய வேடத்தில் எஸ்ஏ சந்திரசேகரனும் நடித்துள்ளார்.
இதுவரை தனுஷ் படங்களில் பாடல் பாடாத சின்னக்குயில் சித்ரா இதில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இதில் தாய்க்கும் மகனுக்கும் உள்ள ஒரு ஆராரிரோ பாடல்.
இதற்கு முன்பு ஜானகி, தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
கொடி படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் விவேக் எழுதியுள்ளார்.
மற்ற பாடல்கள் குறித்த ஒரு பார்வை இதோ…
1) கொடி பறக்குதா…..
பாடியவர்கள் : தனுஷ் மற்றும் அருண்ராஜா காமராஜ்
பாடியவர்கள் : தனுஷ் மற்றும் அருண்ராஜா காமராஜ்
கபாலி படத்தில் உள்ள வீர துரந்துரா என்ற அதே ட்யூனில் இப்பாடல் தொடங்குகிறது. அதாவது பாடல் என்பதை விட வீர வசனங்கள் நிறைந்த வரிகள்தான் இவை.
இதில் தனுஷ் உடன் நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் இணைந்து பாடியிருக்கிறார்.
கொடி, நான் பறக்கிற நேரம் இதுடா. மவனே தேடி போய் செய்ய போறேன்டா…
என்ற பன்ச் வசனங்களோடு இப்பாடல் தெறிக்கிறது.
கொடி காட்டுல எப்பவும் மழைதான்.. அதனால நீ தூரம் நில்லு.. என்று வில்லனை எச்சரிக்கிறார்.
2) ஏய் சுழலி…..
பாடியவர்கள் : விஜயன்ரெயின்
பாடியவர்கள் : விஜயன்ரெயின்
இது தனுஷ் மற்றும் அனுபமா இருவருக்கும் உள்ள பாடல். இதில் தனுஷ் தாடியில்லாமல் ஷேவிங் செய்த முகத்தோடு வருகிறார் போலும். அதற்கான படங்களே இப்பாடலில் உள்ளது.
ஏய் சுழலி, அழகி விலகி களைக்கட்டி போறவளே.. என்ற வரிகளோடு இப்பாடல் ஆரம்பமாகிறது.
பொட்டக் கோழி மற்றும் கிராமத்து பின்னணியில் உள்ள அழகான உயிர்களோடு தன் காதலியை வர்ணிக்கிறார் ஹீரோ.
இப்பாடல் கிராமத்து இளைஞர்களை பெரிதும் கவரலாம்.
3) ஆரிராரோ…..
பாடியவர் : சித்ரா
பாடியவர் : சித்ரா
ஆரிராரோ அழகு தாமரையே என இப்பாடல் தொடங்குகிறது. அதில் தன் மகனை மீண்டும் கருவறைக்குள் வந்து ஒளிந்துக் கொள்ளச் சொல்கிறாள் தாய்.
கருவறையை விட பாதுகாப்பான இடம் ஒரு பிள்ளைக்கு அமைய போவதில்லை என தன் அழகான வரிகள் மூலம் உணரச் செய்கிறார் கவிஞர் விவேக்.
இதுபோன்ற வரிகளால் தாய் பாசத்தை நமக்கு ஊட்டுகிறார். இதுபோன்ற பாடல்கள் நிச்சயம் இன்றைய குழந்தைகளுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவமாய் இருக்கும்.
4) சிறுக்கி வாசம்…..
பாடியவர்கள் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ஸ்வேதா மோகன்
பாடியவர்கள் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ஸ்வேதா மோகன்
கிறங்கி போனேன்… என் கன்னத்தில் சின்னம் வச்சான்.. என்ற ஸ்வேதா மோகனின் அழகான குரலிசையில் இப்பாடல் தொடங்குகிறது.
இப்பாடலுக்கு முன்பு தனுஷ் மற்றும் த்ரிஷா இருவரும் எதிரிகள் போல இருந்துள்ளனர்.
ஆனால் அதன் பின்னர் இந்த கிளியானது வேறொரு கட்சியில் இருந்து இன்று இவன் வசமாகிய பட்சியாக மாறிவிட்டது என்கிறது இந்த வரிகள்.
இடைத்தேர்தல் வந்தால் இவன்தானே கொடி நாட்டுவான்… என்ற வரிகளில் காதல் தேர்தலையும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் ஆண் குரலில் இப்பாடல் வேகம் எடுக்கிறது.
5) வேட்டு போட்டு…..
பாடியவர்கள் : சங்கர் மகாதேவன்
பாடியவர்கள் : சங்கர் மகாதேவன்
வேட்டு போட்டு கொண்டாடுடா… இவன் நம்மாளுடா.. விசில் பத்தாதுடா… என நாயகனின் வெற்றியை வாழ்த்தும் பாடல் இது.
தொட்டு அடிச்சா பொறி பறக்கும்… எட்டு திசையும் கொடி பறக்கும்…
என மேள தாளத்துடன் இப்பாடல் தூள் கிளப்புகிறது.
இனி தனுஷ் ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
மொத்தத்தில் தாலாட்டு, மெலோடி, ஆவேசம், குத்துபாட்டு ஆகியவை கலந்து இந்த கொடி பறக்குது.
0 comments:
Post a Comment