சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நடிகர் தனுஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். மேலும் அவர்களுக்கு உணவு பொட்டலங்கள், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள், போர்வை முதலிய நிவாரண பொருட்களையும் அவர் பெரிதளவில் ஏற்பாடு செய்து வழங்கி வருகிறார்.
இவருடன் இவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் சகோதரர் செல்வராகவன், டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் உடனிருந்து உதவி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் டிவிட்டரில் நடிகர் தனுஷ் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த தகவல்களை சேகரித்து பகிர்ந்து வருகிறார். இதனால் பலர் பயனடைந்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment