பல படங்களின் தொடர்தோல்விகளால் துவண்டிருந்தார் கஸ்தூரி ராஜா. அப்போது அவர் துள்ளுவதோ இளமை என்ற ஒரு படத்தை தயாரித்து, இயக்க ஆரம்பித்தார். அந்தப் படம் வெற்றிபெற்றால் சென்னையில் வாழ்வது இல்லையேல் மனைவி குழந்தையுடன் சொந்த ஊருக்குச் சென்று விடுவது என்கிற முடிவில் இருந்தார். படத்துக்கு ஹீரோ என்று தனியாக ஆள் போட்டால் அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமே என்று தயங்கி தன் மகன் வெங்கடேஷ் பிரபுவுக்கு தனுஷ் என்று பெயர் சூட்டி நடிக்க வைத்தார்.
துள்ளுவதோ இளமை அவரது வழக்கமான பாணியிலான கிளாமர் கதைதான். படத்தை அப்பா இயக்குவது சரியில்லை என்று கருதிய அவரது மூத்த மகன் செல்வராகவன், "அப்பா நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க இந்தப் படத்தை நான் டைரக்ட் பண்றேன்"னு சொல்லி அவரை தயாரிப்பாளராக்கிவிட்டு இவர் டைரக்ட் செய்தார். ஆனால் படத்தின் பெயரில் கஸ்தூரி ராஜா தான் டைரக்டர் என்று வந்தது.
படம் வெளிவந்த பிறகு கடுமையான விமர்சனத்தை சந்தித்தாலும் வசூலைக் கொட்டிக் கொடுத்தது. கஸ்தூரிராஜா குடும்பம் சென்னையிலேயே செட்டிலானது. அப்போதும்கூட செல்வராகவன் நல்ல இயக்குனராக அறியப்பட்டாரே தவிர தனுஷ் நல்ல நடிகராக அறியப்படவில்லை .
Directed By
|
Produced By
|
Written By
|
Story By
|
Starring
|
Music By
|
Cinematography
|
Edited by
|
Production
company
|
Kasthuri Raja
|
M. Ramakrishnan
|
Selvaraghavan
|
Kasthuri Raja
|
Dhanush
Sherin
Abhinay
Ramesh
Shilpa
Gangeshwari
Ramesh Khanna
|
Original songs:
Yuvan Shankar Raja
Background Score
Viji Manue
|
Ashok Raaj
|
Suresh Urs
|
Karthik Cine Visions
|
0 comments:
Post a Comment