நெட்ப்ளிக்ஸ் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளார்.

ஹாலிவிட்டில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். அதிக வசூலை குவித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தை சகோதரர்களான ஜோ ரூஸ்ஸோ மற்றும் அந்தோணி ரூஸ்ஸோ ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இவர்கள் கேப்டன் அமெரிக்கா, விண்டர் சோல்ஜர், சிவில் வார் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களையும் இயக்கியுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் நெட்பிளிக்ஸுடன் கைகோர்த்து ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் ‘The Gray Man’ என்ற திரைப்படத்தை ஜோ ரூஸ்ஸோ மற்றும் அந்தோணி ரூஸ்ஸோ இயக்குவதாக அறிவித்துள்ளனர். இதுவரை நெட்ஃபிளிக்ஸ் தயாரித்த திரைப்படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை நடிகர் தனுஷும் உறுதி செய்துள்ளார். இதனிடையே, தனுஷ் ‘எக்ஸார்டினரி ஜார்ஜி ஆஃப் ஃபகீர்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

 
Top