தனுஷ் நடிப்பில் வேல்ராஜ் இயக்கும் ‘விஜபி-2’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமாக்கப்பட உள்ளதாம்.
இதற்காக சென்னையில் உள்ள பின்னி மில்லில் ரெயில் நிலையம் போன்ற அரங்கை அமைத்துள்ளனர்.
டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரும் ரெயிலில் நாயகனுக்கும், நாயகிக்கும் நடக்கும் காதலும், மோதலும்தான் இப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
இதில் தனுஷ், ரெயில் கேண்டீன் சர்வராக நடிக்கிறாராம். டி.இமான் இசையமைக்க, வி.மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
0 comments:
Post a Comment