‘தூள்’ படத்தில் ‘சிங்கம் போல…’ என்ற பாடலை பாடி நடித்து பிரபலமானவர் பரவை முனியம்மா. இதை தொடர்ந்து 30–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக சிவகார்த்திகேயனுடன் ‘மான்கராத்தே’ படத்தில் பாட்டு பாடி நடித்தார். டெலிவிஷனில் சமையல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். பொது விழாக்களில் நாட்டுப்புற பாடல்களையும் பாடி வந்தார்.
சமீப காலமாக பரவை முனியம்மாவுக்கு படங்கள் இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். மருந்து வாங்கவும் பணம் இல்லாமல் அவதி பட்டு வந்துள்ளார்.
இது பற்றிய தகவல் வெளியானதும் நடிகர் விஷால் அவருக்கு மருத்துவ செலவை ஏற்கொண்டார். மேலும் மாதாமாதம் 5000 ரூபாய் வழங்கி உதவுவதாகவும் உறுதியளித்தார்.
அவரை தொடர்ந்து தற்போது தனுஷும் பரவை முனியம்மாவுக்கு ரூபாய் 5 லட்சம் பண உதவி வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment