கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.
இந்த டிசைனிலேயே படத்தின் ரிலீஸ் தேதியையும் தெரிவித்திருந்தனர்.
இப்படம் காதலர் தின விருந்தாக பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகிறது.
இதனையடுத்து தனுஷ் நடித்து, தயாரித்து இயக்கி வரும் பவர் பாண்டி படத்தின் புதிய டிசைனை வெளியிட்டுள்ளனர்.
ராஜ்கிரண், பிரசன்னா மற்றும் சாயாசிங் நடிக்கும் இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி (தமிழ் புத்தாண்டு தினம்) வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டதட்ட 60 நாட்கள் இடைவெளியில் தனுஷின் இரண்டு படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
 

0 comments:

Post a Comment

 
Top