கோச்சடையான் படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது படைப்பாக தனுஷ் நடிக்கவுள்ள விஐபி 2 படத்தை இயக்கவிருக்கிறார் சௌந்தர்யா ரஜினி.
இப்படம் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளது.
இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் காட்சியை கிளாப் அடித்து துவக்கி வைத்தார் ரஜினிகாந்த்.
இதில் தனுஷ் உடன் அமலாபால், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இவ்விழாவில் லதா ரஜினிகாந்த், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

 
Top