தனுஷ் படங்களை தயாரித்தும், இயக்கியும் வருகிறார்.
இவர் முதன்முதலில் இயக்கும் பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரண் நாயகனாக நடிக்கிறார்.
தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு முதன் முதலாக இயக்குனராக வாய்ப்பளித்து அப்படத்தை தயாரித்தவர் ராஜ்கிரண்தான்.
மீனா நாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே என்ற அப்படம் 1991ல் வெளியானது.
எனவே, பவர் பாண்டியில் ராஜ்கிரனுக்கு வாய்ப்ப்பளித்து, தன் தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் இப்படத்தை அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டு தினத்தில் 14-04-2017 வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார் தனுஷ்.
அன்றைய தினம் தனுஷின் அம்மா விஜயலெட்சுமியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் அம்மாவுக்கும் பெருமை சேர்க்கிறார் இந்த தங்கமகன்.
Dhanush gift to his parents by power paandi movie
0 comments:
Post a Comment