ஒருவனுக்கும் திறமையும், நம்பிக்கையும் மட்டும் இருந்தால் அவன் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறாலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் தனுஷ். நடிக்க தொடங்கிய போது பலரின் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி அதை பெரிதாக நினைக்காமல் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார்.
நடிகர் என்றில்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறைமைகளை திரையுலகிற்கு வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் நடிக்க வேண்டும் என்பது சினிமாவிற்குள் நுழையும் சில இளம் நடிகைகளின் ஆசையாக இருக்கிறது. அதில் ஒருவர் தான் மிஷ்டி. யார் இந்த மிஷ்டி?
அதர்வாவின் ‘செம போத ஆகாத’ படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் தான் இந்த மிஷ்டி. பெங்காலி நடிகையான இவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார். தன்னை தனுஷின் தீவிர ரசிகை என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் மிஷ்டி, தனுஷுடன் நடிக்க வேண்டும் என்பது தனக்கு கனவு என்றும் தற்போது அதற்கான தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Top