தனுஷ் சினிமா துறையில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்துவிட்டார். அவருக்கு சினிமாவில் நடிப்பதை தாண்டி இயக்குனர் ஆவது தான் ஆசை என்று ஏற்கெனவே கூறியிருந்தார்.
அதன்படி ராஜ்கிரண் அவர்களை வைத்து பா.பாண்டி என்ற வெற்றி படத்தையும் கொடுத்தார். அடுத்து என்ன படம் இயக்க போகிறார், யாரை வைத்து இயக்குவார் என்று பல கேள்விகள் வந்தன.
இந்த நிலையில் தனுஷ் அடுத்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படம் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. அப்படத்தில் தனுஷே நாயகனாகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
Top