`வடசென்னை', `எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், `மாரி-2' படத்தின் படப்பிடிப்பும் இன்று துவங்கியிருப்பதாக தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் `மாரி-2' படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கிருஷ்ணாவும், வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. #Dhanush #Maari2
0 comments:
Post a Comment