விஜய் டிவியின் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா. இப்போதும் இவர் தொலைபேசியில் அந்த டிவியின் முக்கிய விருந்தினர்கள் உள்பட அனைவரும் கலாய்க்கும் நிகழ்ச்சி பிரபலமாகி வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே ஒருசில படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்துள்ள தீனா தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆகிய Kattappanayile Rithwik Roshan என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் தீனா ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் டைட்டில், இயக்குனர் மற்றும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும், இந்த படத்தை அடுத்து தனுஷ் தயாரிக்கும் இன்னொரு படத்திலும் தீனா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.

0 comments:
Post a Comment