தேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம்
” வட சென்னை ” . 23 .9 .18 ஞாயிறு அன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது.மேலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. படத்தின் பாடல்கள் யூ -டூப் ட்ரெண்டிங்கிலும் ,மற்றும் Saavn , Jio மியூசிக் ஆகியவற்றில் அனைவராலும் அதிகமுறையில் கேட்கப்பட்டு வருகின்றது.

இத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார்.இது இவருக்கு 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது !
பொல்லாதவன் ,ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி இந்த படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.மேலும் தனுஷ் தயாரிப்பில்,வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை தேசிய விருதை பெற்றது.அதுமட்டுமில்லாமல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.காக்காமுட்டை திரைப்படமும் தேசிய விருதினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வட சென்னை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.சமுத்திரக்கனி,ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ்,அமீர்,டேனியல் பாலாஜி ,கிஷோர் குமார்,பவன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
தற்போது மக்களிடையே இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.பாடல்கள் மிகப்பெரிய அளவில் அனைவராலும் விரும்பப்பட்ட வருகின்றது.தனுஷ் ,சித்ஸ்ரீராம் மற்றும் சென்னை கானா பாடல்கள் பாடும் கலைஞர்களால் பாடல்கள் பாடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment