தென்னிந்தியாவின் நம்பர் ஒன் என்ற இடத்தை ட்விட்டரில் நடிகர் தனுஷ் எட்டியிருக்கிறார்.
தனுஷ் கையில் இப்போது ஏகப்பட்ட படங்கள். ‘வடசென்னை’, ‘மாரி2’,‘என்னைநோக்கி பாயும் தோட்டா’, "ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என உயரத்தில் உட்கார்ந்திருக்கிறார் தனுஷ். இதுபோக ‘காலா’ மூலம் பெரிய தயாரிப்பாளர் பட்டியலில் சேர்ந்திருகிறார். இவர் எந்தப் பட்டியலில் சேர்கிறார் என்பதைவிட இவரோடு எத்தனை பேர் சேர்கிறார்கள் என்பதில்தான் உள்ளது இவரது வளர்ச்சி. தற்போது ட்விட்டரில் தனுஷை பிந்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை தாண்டி இருக்கிறது. அதாவது 70 லட்சம். ரஜினிகாந்திற்கே 4.58 மில்லியன் பேர்தான் பின் தொடர்கிறார்கள். ஆகவே இளம் ஹீரோக்களிலேயே தனுஷைதான் அதிகம் பேர் பின் தொடர ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் தென் இந்திய ஹீரோக்களில் 7 மில்லியனை எட்டி தனுஷ் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Top