பவர் பாண்டி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் நடிகர் தனுஷ். இயக்குநராக முதல் படம் மூலம் அனைவரிடம் பலத்த பாரட்டைப் பெற்றார்.
தற்போது வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரீலிஸ் தேதி குறித்து தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கஜோல் தனுஷ் உடன் இணைந்து நடித்திருப்பது படத்தின் ஒரு சிறப்பு.
வேலையில்லா பட்டதாரி முதல் பாகம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகத்தின் கதை மற்றும் வசனம் தனுஷின் கைவண்ணத்தில் உருவாகி உள்ளது. மேலும் இப்படத்தின் வெளியீடு தனுஷ் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Top