'துள்ளுவதோ இளமை' மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் தனுஷ், திரையுலகுக்கு வந்து 15 வருடங்களாகிவிட்டன. தனது திரையுலக பயணத்தில் 15 ஆவது வருடத்தை எட்டியுள்ள சந்தோஷத்தில் இருக்கிறார் தனுஷ். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என இந்த 15 வருடங்களில் தன்னை வளர்த்துக் கொண்ட தனுஷ், சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த 'பா.பாண்டி' படம் மூலம் இயக்குநராகவும் வெற்றியடைந்துள்ளார்.
இன்னொரு பக்கம், கோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்த தனுஷ், 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் தற்போது கால் பதித்துள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடிப் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பை இந்தியா, பெல்ஜியம், பாரிஸ், ரோம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
ஆர்ட்டிஸ்ட் திரைப்படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை பெரெனைஸ் பிஜோ முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் பகிர் எனும் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறாராம். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்துக்காக தன்னுடைய ஹேர்ஸ்டைலில் மாற்றம் செய்துள்ளார் தனுஷ். 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததும் வட சென்னை படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்

0 comments:

Post a Comment

 
Top