நடிகர் தனுஷ் அண்மையில் காலா படத்தின் டீசரை வெளியிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். தலைவர் டீசர் எப்போது ரிலீஸ் ஆனாலும் தீபாவளி தான் என அவர் சொன்னது போல தான் இருந்தது. 13 மில்லியன் பேர் இதுவரை பார்த்துள்ளனர்.
தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை நீண்ட நாட்களாக வேலைகள் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் இப்படம் வரும் ரம்ஜான் (ஜூன் 14) அன்று வரவுள்ளதாக தகவல் வெளியானது.
தற்போது தனுஷ் ட்விட்டரில் இப்படம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். இதில் அவர் இப்படம் மூன்று வருட கடுமையான உழைப்பு. இதன் முதல் விளம்பர அறிக்கை வரும் வியாழன் அன்று ( மார்ச் 8 ல்) என கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்
0 comments:
Post a Comment