பவர் பாண்டி என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நதியா, பிரசன்னா, சாயா சிங், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். தனுஷும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வருகிறாராம்.
கடந்த மாதம் துவங்கிய படப்பிடிப்பு விறு விறு என நடந்து வருகிறது. அதற்குள் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். இந்த பட வேலையை முடித்து விட்டு தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்க செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் இயக்குனராக அதுவும் முதல் படத்திலேயே இவ்வளவு வேகமாக வேலை பார்ப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
0 comments:
Post a Comment