தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் இருவரும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களாக உள்ளனர்.
ஆனால் இவர்களின் வழியில் வந்த தனுஷோ இதுநாள் வரை நடிப்பு, பாடல் ஆசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பு என இருந்தார்.
தற்போது பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக மாறி விட்டார்.
ராஜ்கிரண் நடித்துவரும் இதன் படப்பிடிப்பை படுவேகமாக படமாக்கி வருகிறாராம் தனுஷ்.
இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை செல்வராகவன் பார்த்து இருக்கிறார்.
“எல்லாம் கலந்து, காமெடியாகவும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் படம் உள்ளது. தனுஷ் உன்னை நினைத்து பெருமைப் படுகிறேன்.
ராஜ்கிரண் சார் சூப்பர் பெர்மான்ஸ்” என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment