கொடி படம் முழுக்க முழுக்க அரசியல் படம் என்று நடிகர் தனுஷ் கூறினார்.
தீபாவளிக்கு வரவிருக்கும் கொடி படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேபில் நடந்தது.
விழாவில் தனுஷ் பேசுகையில், "இதுவரை நான் நடித்த திரைப்படங்களில் புதுப்பேட்டையில் சிறிய அளவில் அரசியல் இருக்கும். ஆனால் கொடி படம் முழுக்க முழுக்க அரசியலைப் பற்றி பேசும் ஒரு படமாக இருக்கும். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு மிக சிறந்த இசையைக் கொடுத்துள்ளார் அவருக்கு நன்றி.
நான் குக்கூ திரைப்படத்தில் இருந்து அவருடைய இசையை உற்று நோக்கி வருகிறேன். இப்படத்தில் அவரோடு பணியாற்றுவது மகிழ்ச்சி.
இப்படத்திற்கு நான் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். நான் முதன் முதலில் நடிக்கும் ரெட்டை வேட திரைப்படம் இதுதான். இப்படத்தின் கதை இயக்குநர் துரை செந்தில் குமார் என்னிடம் கூறும் போது அக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாம் ரெட்டை வேடத்தில் நடிக்க இதுவே சரியான படமாக இருக்கும் என முடிவு செய்து இப்படத்தில் நடித்தேன்.
இப்படத்தில் 8 வருடமாக ஒன்றாக பணியாற்றிய நண்பர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்கள் அனைவருக்கும் இது முக்கியாமான திரைப்படமாக இருக்கும்," என்றார்.
0 comments:
Post a Comment