துரை செந்தில்குமார் இயக்கியுள்ள படம் கொடி இப்படத்தில் அண்ணன், தம்பி என இரு வேடம் ஏற்றுள்ளார் தனுஷ்.
இயக்குனர் வெற்றிமாறன் எஸ்கேப் ஆர்ஸ்டிஸ்ட் மதனுடன் இணைந்து தயாரித்துள்ளார்.
கவிஞர் விவேக்கின் வரிகளில், சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த ட்ரைலர் குறித்த தகவல்களை இங்கே தனுஷ் ரசிகர்களுக்காக பகிர்கிறோம்.
இதுவும் மாரி போன்ற மாஸ் ஆகஷன் நிறைந்த படம்தான் என தெரிய வந்துள்ளது.
அதில் ஒரு மாரியாக இருக்கும்போது வெளுத்து கட்டியிருந்தார் தனுஷ். தற்போது இதில் இரண்டு வேடம் கட்டி தன் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் எனலாம்.
மாரி படத்தின் ட்ரைலரில் காளி வெங்கட் குரல் ஒலிக்கும். அதில் மாரியை பற்றி சொல்வார்.
முதல்ல சாதாரண ஆள இருந்த மாரி, இப்போ வேற லெவர் இருக்கான் சார். நாம் எல்லாம் அவன தொடக்கூட முடியாது சார்.. என்பாரே… அதேபோலதான் இதிலும்.. கொஞ்சம் மாறுதல்களோடு.
நம்ம பொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க. அவன் பொறந்ததே அரசியலுக்காகத்தான்.. (அது எல்லாம் எப்படி நீங்க கேட்க கூடாது.)
வந்தது… வாழ்ந்தது.. இதையெல்லாம் விட நமக்கு பிறகு என்ன நிக்குது. அதான் மேட்டரு என் தன் பிஏ காளி வெங்கட் இடம் சொல்வது போல தனுஷ் பன்ச் டயலாக்கோடு ஆரம்பிக்கிறார்.
பின்னணில் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்க. அடிதடிகளுடன் அடுத்த பன்ச் பேசுகிறார் தனுஷ்.
எப்பவுமே அலர்ட்டா இருக்கிறவன்தான்டா அரசியல்வாதி என்கிறார்.
ஆனால் இவர் வீட்டிலோ இவரது அம்மா சரண்யாவோ இந்த வெட்டி பந்தாவ வச்சி நாக்க வழிக்க முடியும் என்று திட்டுகிறார்.
அதன் பின் த்ரிஷாவின் உதட்டை பிழிந்து ஒரு டூயட் பாடுகிறார் (சிறுக்கி வாசம் பாடல்)
இதில் தாடி வைத்தவர் அண்ணனாக வருகிறார். அவருக்குதான் த்ரிஷா ஜோடி.
தம்பி கேரக்டர் தனுஷ்க்கு ஜோடியாக அனுபமா வருகிறார். இதில் பிரேமம் படம் போல், கூந்தலை விரித்து போடாமல் தலைமுடியை பின்னியபடியே வந்தாலும் அழகாக இருக்கிறார்.
அதன்பின்னர்தான் அரசியல் காட்சிகள் சூடு பிடிக்கிறது. பாக்டரியில் இருந்து வரும் விஷவாயு அந்த ஊரையே தாக்குகிறது.
எனவே உள்ளுரில் பிரச்சினை எழ, அரசியல்வாதிகள் தலை எடுகின்றனர்.
இதில் மகளிர் தலைவியாக த்ரிஷா வருகிறார். அரசியல் ஜெயிக்கனும்ன்னா ஏதாச்சும் பண்ணிக்கிட்டே இருக்கனும் என்கிறார்.
இவங்க எல்லாம் பேசியே ஜெயிச்சவங்க. நான் ஜெயிச்சிட்டு பேசுவேன் என பன்ச் அடிக்கிறார் தனுஷ்.
அதன் பின்னர் இவரது குடும்பத்திற்கு மற்ற அரசியல்வாதிகள் பிரச்சினை எழுகிறது. எஸ்ஏசி என்ன செய்ய போகிறாய் என் அதட்டி கேட்கிறார்.
எல்லாரும் சிங்கிளா பொறப்பாங்க… நான் பொறக்கும்போதே டபுளா பொறந்தவன் என்று கூறி புறப்படுகிறார்.
அரசியல் என்றால் மீடியா, பத்திரிகை இல்லாமல் இருக்குமா? இடையே பத்திரிகையாளர்களை சந்தித்து அறிக்கை எல்லாம் விடுகிறார்.
அரசியலும் தெரியும். அதில உள்ள நல்லவங்களை தெரியும் என்கிறார்.
இறுதியாக ட்ரைலர் முடியும்போது கொடி பறக்குதா? என்ற பன்ச் டயலாக்கோடு தனுஷ் முடிக்கிறார்.
ஆக மொத்தம் இதில் டபுள் மாரியை பார்த்த மாஸ் எப்பெக்ட்தான்… கொடி பறக்க வாழ்த்துவோம்.
0 comments:
Post a Comment