ஜீனியர் நடிகர்களின் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
பரத்பாலா இயக்கிய தனுஷின் மரியான் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
அதுபோல், தனுஷ் நடித்த ராஞ்சனா என்ற இந்தி படத்திற்கும் இசையமைத்திருந்தார். (தமிழ் பதிப்பு தலைப்பு அம்பிகாபதி)
இந்நிலையில், கௌதம் மேனன்-தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் இதுவரை முடிவாகவில்லை.
இருந்தபோதிலும் இப்படத்தின் பாடல் காட்சிகளை தனது கற்பனையாலே படமாக்கிவிட்டார் கௌதம்.
இதன் இசையமைப்பாளரை விரைவில் கௌதம் அறிவிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அது ஏஆர்.ரஹ்மான் ஆக இருக்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.
இது உறுதியாகும் பட்சத்தில், ஏஆர்.ரஹ்மான், தனுஷ் இணைவது 3வது முறையாகும்.

0 comments:

Post a Comment

 
Top