தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன்.
மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்க, எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
விரைவில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
ஆனாலும் படத்தின் வில்லன் மற்றும் இசையமைப்பாளர் யார்? ஆகிய விஷயங்களில் படு ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.
இதனிடையில், பாடல்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையிலே சில பாடல்களை படமாக்கி விட்டாராம் கௌதம்.
இதற்கு நாயகன் தனுஷும் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
இந்நிலையில் இதன் இசையமைப்பாளரை ஒரு பாடலை வெளியிட்டு அதன் மூலமாக அறிவிக்க இருக்கிறார்களாம்.
0 comments:
Post a Comment