ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா படங்களை இயக்கி வருகிறார்.
விரைவில் சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கவிருக்கிறார்
இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரஜினி வர்ணனை (வாய்ஸ் ஓவர்) கொடுக்கவிருக்கிறார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஐஸ்வர்யா பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதில் 2016ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் அமைப்பில், பெண்களின் சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கான விடை ஐஸ்வர்யா தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Top