துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் அரசியல் திரில்லர் படம் கொடி. இப்படத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தனுஷ் ஜோடியாக த்ரிஷா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் கடந்த அக்டோபர் 28-ம் தேதி வெளியானது.
படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தனுஷின் நடிப்பு சூப்பராக இருப்பதாகவும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்ததாகவும் பாராட்டி வருகிறார்கள். ஹீரோயின்கள் அனுபமா மற்றும் த்ரிஷா இருவரும் அழகாகவும் அதேசமயம் யதார்த்தம் மீறாமலும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இப்படம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 25 கோடியும் இதில் வெளிநாடுகளில் மட்டுமே ரூ. 4.5 கோடி வசூல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment