நடிகர் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 50% நிறைவடைந்துள்ளது. இதற்கிடையில் அவர் நடித்துள்ள தொடரி மற்றும் கொடி படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இவர் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
ஆனால் இறைவியில் கார்த்திக் சுப்புராஜூக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் மோதல் ஏற்பட்டதால் தனுஷ் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக நேற்று இணையத்தில் ஒரு செய்தி வெளியானது. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் தற்போது இத்தகவலை மறுத்துள்ளார். மேலும் திட்டமிட்டப்படி இப்படம் விரைவில் தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment