பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் தொடரி. இப்படத்தில் தனுஷ் பூச்சியப்பன் எனும் கதாபாத்திரத்தில் ரயில் நிலையத்தில் வேலை செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சரோஜா எனும் கதாபாத்திரத்தில் நடிகைக்கு மேக்கப் போடும் கேரள பெண்ணாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இதன் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக இப்படம் ரம்ஜான் ஸ்பெஷலாக ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அதே தேதியில் கபாலி வெளிவர வாய்ப்பிருப்பதால் தொடரி ரிலீஸ் தேதியை தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றியமைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
0 comments:
Post a Comment