தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவிருக்கும் படம் வட சென்னை. தற்சமயம் கௌதம் இயக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்துவரும் தனுஷ், அதன் படப்பிடிப்பு முடிந்ததும் இதில் நடிக்கவுள்ளார். தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர்களுடன் டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி ஆகியோர் மிரட்டும் வில்லன்களாக நடிக்கவுள்ளனர். வரும் ஜூலை 15-ம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை பின்னி மில்லில் ஒரு மிகப்பெரிய சிறைச்சாலை செட் உருவாகி வருகிறது
0 comments:
Post a Comment