பொல்லாதவன், ஆடுகளம் வெற்றி கூட்டணி 3வது முறையாக இணையவிருக்கும் “வட சென்னை” இப்போ – அப்போ என கடந்த ஆண்டே பேசப்பட்டு இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்து வந்தது.
வெற்றிமாறனின் கனவு படமான வட சென்னையை தனுஷுடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் மொத்தம் 3 பாகங்களாக உருவாகவிருக்கிறது. அதில் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியிருக்கிறது.
சென்னையில் மிக எளிமையாக நடந்த இந்த தொடக்க விழா பூஜையில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். தனுஷ், சமந்தா, ஆன்ட்ரியா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top