இயக்குனர் ராம்கோபால் வர்மா, டிவிட்டரில் சூப்பர்ஸ்டார் ரஜினியை பாலிவுட் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் ஒப்பிட்டு தரக்குறைவாக பேசியுள்ளார். ” அமிதாப் பச்சன் நடித்த Te3N படத்தில் ரஜினி நடித்தால் அது வெறும் 1%தான் இருக்கும். ஆனால் அமிதாப், கபாலியில் நடித்தால் அது 100% இருக்கும். இதற்கு ரஜினி பதில் அளிக்கவேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து ரசிகர்கள் பலரும் ராம்கோபால் வர்மாவுக்கு எதிராகவும் அவரது இந்த ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்தும் ட்வீட் செய்து வருகின்றனர். அந்தவரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபுவும், “சார் உங்களால் மட்டும்தான் ஷோலே படத்தை கூட ஃப்ளாப் ஆக்க முடியும். ஆனால் எங்கள் சூப்பர்ஸ்டார் நினைத்தால் Te3N படத்தை கூட வரலாற்றாக்க முடியும்” என கூறினார். இதை ஆமோதித்து நடிகர் தனுஷும், “நன்றாக சொன்னீர்கள்” என பதில் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment