தனுஷ் நடித்து வரும் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் ஒவ்வொருவராக இணைந்து வருவதை அவ்வப்போது வெளிவரும் செய்திகளின் மூலம் பார்த்து வருகிறோம்.

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்தார். மேலும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மெயின் வில்லனாக இயக்குனர் சுப்பிரமணியம் சிவா நடிக்கவுள்ளார் என்ற தகவல் சற்றுமுன் வெளிவந்துள்ளது. இவர்தான் தனுஷ் நடித்த 'திருடா திருடி' படத்தின் இயக்குனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஏற்கனவே டேனியல் பாலாஜி, கிஷோர் ஆகியோர் வில்லன்களாக நடித்து வரும் நிலையில் அவர்களுக்கெல்லாம் டான் ஆன சுப்பிரமணியம் சிவா நடிக்கவுள்ளாராம். இதை படக்குழுவினர்களும் உறுதி செய்துள்ளனர்.

தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தனுஷ் மற்றும் ஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

0 comments:

Post a Comment

 
Top