நடிக்க வந்த புதிதில் இந்தி, மராட்டிய படங்களில் நடித்துக் கொண்டிருந்த ராதிகா ஆப்தேவை ‘தோனி’ படம் மூலம் கோலிவுட்டிற்கு இறக்குமதி செய்தார் பிரகாஷ் ராஜ். இந்தப் படத்தை தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உட்பட ஒரு சில படங்களில் நடித்தாலும் யாராலும் அறியப்படாத நாயகியாகவே இருந்தார் ராதிகா. இந்த நேரத்தில் தான் பா.ரஞ்சித் மூலம் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அப்போது பலரும் எப்படி ராதிகாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று யோசித்தனர்.
தற்போது கபாலி படம் ரிலீஸாகி இவருடைய நடிப்பும் பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. முதலில் மாமனாருடன் ஜோடி சேர்ந்த ராதிகா ஆப்தே அடுத்து மருமகன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். தற்போது தொடரி, கொடி படங்களில் நடித்து முடித்துவிட்ட தனுஷ் அடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் தான் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ராதிகா ஆப்தேவிடம் பேச்சுவார்த்தை நடிந்து வருகிறதாம். விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை, கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment