தனுஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய 'தொடரி' திரைப்படம் வரும் சுதந்திரதின விடுமுறை வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் வந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 2 என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையுடன் கூடிய வாரவிடுமுறை வருவதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே செப்டம்பர் 2ஆம் தேதிதான் விக்ரமின் 'இருமுகன்' படமும் ரிலீஸ் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷ், கீர்த்திசுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் உத்தமன், தம்பிராமையா, ராதாரவி, கருணாகரன், ஆர்.வி.உதயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவும், எல்.வி.கே தாஸ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

0 comments:
Post a Comment