துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அரசியல் திரில்லர் படம் கொடி. இதன் படப்பிடிப்பு பணிகள் எப்போதோ முடிந்துவிட்டது. மேலும் இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 29-ம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என நடிகர் தனுஷ் டிவிட்டரில் அறிவித்துள்ளார். வுண்டர்பார் நிறுவனம் சார்பாக தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தில் த்ரிஷா, அனுபமா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். த்ரிஷா இப்படத்தில் முதல்முறையாக வில்லியாக நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக தனுஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
0 comments:
Post a Comment