ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி உலகளவில் பெரும் சாதனை படைத்தது.
மேலும் இதன் க்ளைமாக்ஸில் அடுத்த பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக காட்சி இருந்தது.
தற்போது இதனை மெய்பிக்கும் வகையில், இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என தெரிய வந்துள்ளது.
இப்படத்தை தனுஷின் வுண்டெர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. அதை தனுஷே ட்விட்டரில் வீடியோ பதிவுடன் அறிவித்தார்.
இதனால் இணையம் முழுவதும் இந்த செய்தி வைரலாகி வருகிறது.
இது கபாலி படத்தின் தொடர்ச்சியா? அல்லது புதிய படமாக குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
0 comments:
Post a Comment