பிரபல நடிகர் தனுஷ் தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் கலக்கியவர்.
இவரது ராஞ்சனா மற்றும் ஷமிதாப் திரைப்படங்கள் அங்கு அவருக்கு பெயர் சொல்லும் படி அமைந்தது.
அடுத்த அவர் மணிரத்னம் இயக்கத்தில் 1988ம் வெளிவந்த அக்னி நட்சத்திரம் திரைப்படத்தை ஹிந்தி யில் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது.
தமிழில் விக்ரம் மற்றும் ஜீவா வைத்து டேவிட் என்ற படத்தை கொடுத்தவர் பிஜோய் நம்பியார்.
ஆனால் தற்போது வந்த தகவல் படி தனுஷ் இப்படத்தில் நடிக்கவில்லையாம், என்ன காரணம் என்று விசாரித்தால், ஏற்கனவே தமிழில் ஒரு டஜன் படங்களை கமிட் செய்து வைத்திருப்பதால் தனுஷால் இப்படத்தை தற்போதைக்கு செய்ய முடியவில்லையாம்.
அதே சமயம் பிஜோய்-யும் வேற மலையாள படங்களில் பிஸியானதால் அக்னி நட்சத்திரம் ஹிந்தி ரீமேக்கை அதிகாரபூர்வமாக கைவிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment