ருமுறை தொலைக்காட்சி ஒன்றிற்காக ரஜினியை நேர்காணல் செய்தார், விவேக். அப்போது 'உங்கள் மனநிலையை துல்லியமாகப் புரிந்து கொள்பவர் ஐஸ்வர்யாவா.. செளந்தர்யாவா?' என்றொரு கேள்வியைக் கேட்டார். துளிகூட யோசிக்காமல் 'ஐஸ்வர்யாதான்' என்று பதிலளித்தார். அந்தளவுக்கு தந்தை, மகள் உறவைத் தாண்டி இருவருக்கும் பரஸ்பர புரிதல் அதிகம். மே மாதம் அமெரிக்கா சென்று இரண்டு மாதங்கள் தங்கி இருந்தபோது, ரஜினிக்கு அருகிலேயே இருந்து பாசத்தோடு பணிவிடைகள் செய்தார் ஐஸ்வர்யா.
அமெரிக்காவில், சிகாகோ நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மாஸ்டர் செக்கப்  செய்துவிட்டு, அங்கேயே சில நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக்  கொண்டார் ரஜினி.  லதா ரஜினி, செளந்தர்யா இருவரும் ஒருவாரம் மட்டுமே தங்கிவிட்டு சென்னை திரும்பி விட்டனர். அதன்பின் அப்பாவுக்கு அருகில் இருந்து பாசத்தோடு பணிவிடை செய்தது  ஐஸ்வர்யாவே.  பள்ளிக்குச் செல்லும் தனது மகன்கள் யாத்ரா, லிங்காவை அம்மா லதாவிடம் ஒப்படைத்துவிட்டு அமெரிக்காவில் இருந்தார்.   ஐஸ்வர்யா ஃபோனில் நெகிழ்வோடு குழந்தைகளிடம் பேசுவதைப் பார்த்து ' எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை. நீ வேணா   சென்னைக்கு போ' என்று ரஜினி சொன்ன போதும்  பிடிவாதமாக மறுத்து ரஜினியுடன் இருந்தார், ஐஸ்வர்யா.
ஒரு கட்டத்தில் 'ஏம்மா.. நீ பாட்டுக்கு பசங்களை விட்டுவிட்டு என்கூடவே இருக்கியே.. தனுஷ் கோவிச்சுக்கப் போறார்மா' என்று ரஜினி சொல்ல, ’அங்கிள் எப்போ சென்னைக்கு வர்றாரோ.. அப்போ அவர்கூட நீ வந்தால் போதும்.. பசங்களை நான் பார்த்துக்கறேன்’னு அவர்தான்பா என்கிட்டே சொன்னார்' என்று ஐஸ்வர்யா சொன்னார். சென்னையில் 'கபாலி' ரிலீஸான  அன்று ஆல்பர்ட் தியேட்டரில்  லதா, செளந்தர்யாவோடு தனுஷ் எழுந்துநின்று விசிலடித்த காட்சியை  வாட்ஸ் அப்பில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய்ப் பார்த்திருக்கிறார் ரஜினி.

சென்னை வந்தவுடன் முன்பைவிட  தனுஷ்மீது அதீத பாசம் செலுத்தினார். மகன் போன்று, அன்புள்ள மருமகன் கிடைத்ததில் ரஜினிக்கு மகிழ்ச்சி. தனுஷ் வழக்கமாக  பிறந்தநாளன்று தனது வீட்டில் இருந்து புறப்பட்டு தாய், தந்தை வசிக்கும் வீட்டுக்குச் சென்று அவர்களிடம் ஆசிபெறுவார். அதன்பின் தனது மனைவி, மகன்களுடன்  போயஸ் கார்டன் சென்று ரஜினி, லதாவிடம் வாழ்த்து பெறுவார்.
பெரும்பாலும் பேரக்குழந்தைகள் யாத்ரா, லிங்கா தன் வீட்டுக்கு வந்துவிடுவதால், தனுஷ் வீட்டுக்கு ரஜினி அவ்வளவாகச் செல்வதே இல்லை. இந்தமுறை ஜூலை 27-ம்தேதியே சென்னை சேமியர் சாலையில் உள்ள தனுஷ் வீட்டுக்குச்  சென்ற ரஜினியை பார்த்து தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு ஆனந்த அதிர்ச்சி. 'என்ன தனுஷ் இன்னிக்கு உங்க வீட்டுல தங்கிக்கலாமா?' என்று ஜாலியாக கேட்டார் ரஜினி. மறுநாள் காலையில் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு போயஸ் கார்டன் போனார்.

0 comments:

Post a Comment

 
Top