இந்தாண்டு முடிய இன்னும் இரண்டு வாரங்களே கூட இல்லை. இந்நிலையில் இந்தாண்டின் சூப்பர் ஹீரோக்கள் யார்? என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டாமா ?
உலகநாயகன் கமல்ஹாசன்.
இந்த வருடம் முழுவதும் தன் ரசிகர்களை பரபரப்பாக இருக்க செய்தவர் இவர். கமல் நடிப்பில் இவ்வருடம் மட்டும் மூன்று படங்கள் வெளியாகின.
உத்தமவில்லன் பாக்ஸ் ஆபிஸில் தோற்றாலும் கலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் மகா கலைஞன் இவன் என்பதை நிரூபித்தது அப்படம். படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் தன் கண்களை கூட நடிக்கச் செய்திருந்தார். கூடவே யூத் கமலாகவும் தோன்றி இளம் நடிகர்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மலையாள ரீமேக் பாபநாசம் படத்தை வெகு விரைவில் நடித்துக் கொடுத்தார். ஒரு மூத்த நடிகர் என்று பாராமல் எந்த ஹீரோயிசமும் காட்டாமல் க்ளைமாக்ஸில் போலீசிடம் அடிவாங்கி நம்மை கலங்கடித்தார். இப்படம் தமிழக குடும்பங்களை மிகவும் கவர்ந்தது.
இவற்றைத் தொடர்ந்து தூங்காவனம் என்ற மாறுபட்ட காவியத்தையும் கொடுத்தார். முதல்படத்தில் குடும்பத்திற்காக ஏங்கியவர் இதில் மகனுக்காக போராடி வெற்றியும் பெற்றார். ஒரு யதார்த்த போலீஸ் ஆக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அடுத்த ஹீரோ தல அஜித்…
இந்தாண்டின் தொடக்கத்திலும் இறுதியிலும் இரண்டு மாபெரும் ஹிட்டுக்களை கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கும் நடிகர் அஜித். என்னை அறிந்தால் என்ற குடும்ப சார்ந்த கதையை கம்பீரத்துடன் கொடுத்தார்.
வில்லனுக்கும் சமவாய்ப்பு கொடுத்து அதிலும் தன்னை உயர்த்தி காண்பித்தார். படத்தின் பாடல்களும் அஜித்தின் விதவிதமான கெட்டப்புகளும் படத்திற்கு பக்கபலமாய் அமைந்தது.
தனது அடுத்த வேதாளம் படத்தை தீபாவளிக்கு கொடுத்துவிட எண்ணி, தனக்கு ஏற்பட்ட விபத்தையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்தார். படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததை போன்று படமும் வசூலில் தெறிக்க விட்டது.
இவர்களை அடுத்து தலைவர் தனுஷ்…
அனேகன், ஷமிதாப், மாரி ஆகிய 3 படங்களைத் தொடர்ந்து இன்று (டிச. 18) தங்கமகன் படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனிடையில் வை ராஜா வை படத்தில் கொக்கி குமார் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து பரபரப்பை உண்டாக்கினார்.
இதில் மாரி படம் தனுஷ் ரசிகர்களுக்கான மாஸான படம் என்றால் தங்க மகன் ஒட்டு மொத்த குடும்பத்திற்கான படம் என்றே சொல்லலாம். இப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இவை மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் தரமான படங்களை கொடுத்து வருகிறார் தனுஷ். தான் நடித்த படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை, விஜய்சேதுபதி நடித்த நானும் ரௌடிதான் உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றிப் படங்களையும் தயாரித்து இந்த வருடத்தில் கொடுத்திருந்தார்.
மேலும் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை கமர்ஷியலாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. வெனிஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல விருதுகளை வென்ற விசாரணை படத்தையும் இவரே தயாரித்து இருக்கிறார். இம்மாத இறுதியில் வெளியாகவிருந்த விசாரணை தற்போது அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment