வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் படம் தங்கமகன். பேமிலி என்டர்டையினராக உருவாகியிருக்கும் இந்த படத்துக்கு சென்சாரில் எந்தவித எதிர்ப்புமின்றி கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழக அரசாங்கத்திடம் வரிவிலக்கு பெற இப்படம் தகுதி பெற்றுள்ளது.
அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதியன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
0 comments:
Post a Comment