நடிகர் தனுஷ் புதுப்பேட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாட்டுக்கட்ட நச்சுன்னுதான் இருக்கு என்ற பாடலை சொந்த குரலில் பாடினார்.  அந்த பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது. அதன் பின்னர் தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் பாடி வந்த தனுஷ், சமீபத்தில்  3 படத்தில் அனிருத் இசையில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை எழுதி பாடினார். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் கலைகட்டியது.  சூப்பர் டுப்பர் ஹிட்டானது. அதனால் இப்போது தனது படங்களில் தொடர்ச்சியாக பாடுவது, பாடல் எழுதுவது என இரண்டிலும் தனுஷ் கவனம்செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் வெளியான விஐபி படத்தை அடுத்து தனுஷ் தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் நடித்துள்ள தங்கமகன் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி, அவரே சில பாடல்களை பாடியுள்ளார். மேலும் இந்த படத்தில் மற்ற படங்களை விட பாடல் எழுதுவதில் அதிகமாக கவனம் செலுத்தி உள்ளார் தனுஷ்.
படப்பிடிப்பு தளத்தில் கிடைக்கும் இடைவேளை நேரங்களில் இயற்கை படர்ந்துள்ள பகுதிகளில் தனிமையில் சென்று அங்கு அமர்ந்து பாடல் எழுதுவாராம். அதோடு, வார்த்தைகள் புதியதாக இருக்க ரொம்ப புதுசாக  இன்றைய இளஞ்சர்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தைகளை கேட்டறிந்து பாடல்களை எழுதுவாராம் தனுஷ்.

0 comments:

Post a Comment

 
Top