தனுஷ் நடித்த 'தங்கமகன்' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படம் இம்மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று இந்த படம் சென்சார் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்று பிற்பகல் சென்சார் அதிகாரிகள் 'தங்கமகன்' படத்தை பார்த்துவிட்டு சென்சார் சர்டிபிகேட் கொடுக்கவுள்ளதாகவும், இந்த படம் சென்சார் செய்யப்பட்டவுடன் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் தனுஷ், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Top