தனுஷ் நடித்துள்ள தங்கமகன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் கடந்த ஒருவாரமாக இதன் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்றிரவு இவர் டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அதில் ரசிகர் ஒருவர் அஜித்தை நீங்கள் நேரில் சந்தித்ததுண்டா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தனுஷ், “பலமுறை அவரை நேரில் சந்தித்துள்ளேன். பழகுவதற்கு அவர் மிகவும் எளிமையானவர். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர்” என கூறியுள்ளார். தங்கமகன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் ‘கொடி’ எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment