வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வெளிவர இருக்கும் படம் தங்கமகன். இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையைமைத்துள்ளார்.
இந்நிலையில், தங்கமகன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் குறித்து நடிகர் தனுஷ் இன்று பத்திரிக்கையாளர்ளுக்கு பேட்டி அளித்தார்.
அதில் தனுஷ் கூறியதாவது:-   ‘தங்கமகன்’ படம் குடும்பங்கள் அனைத்தும் சேர்ந்து பார்க்கும்  ஒரு பொழுதுபோக்கு படம். மேலும் இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் ஏற்கனவே நாங்கள் ‘விஐபி’ என்ற மாபெறும் வெற்றி படத்தை கொடுத்து உள்ளோம். அதே கூட்டணி தற்போது மீண்டும் இணைந்திருப்பதால் இந்தப் படமும் வெற்றி பெறும்’ என்று நான் கருதுகிறேன்.
மேலும்  நிருபர் ஒருவர் தனுஷிடம் உங்கள் வாழ்க்கையில் முக்கியமான மூன்று பேர்?அதற்கு தனுஷ் முதலில் என் அம்மாதான். எந்த நேரத்திலும் என்னை பற்றி நினைத்துக் கொண்டு இருப்பவர். இரண்டாவது என் மனைவி ஐஸ்வர்யா. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். மூன்றாவது கடவுள். இவர்கள் மூன்று பேரும் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள்.

0 comments:

Post a Comment

 
Top