பிரபல போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள 2015-ம் ஆண்டிற்கான டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த் (69), கமல் ஹாசன் (46) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நடிகர் தனுஷ் 37-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் இடம்பெறாதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தனுஷை தொடர்ந்து சந்தானம் 52-வது இடத்திலும் சூர்யா 71-வது இடத்திலும் ஆர்யா 80-வது இடத்திலும் உள்ளனர். நடிகைகளில் காஜல் அகர்வால் 58-வது இடத்திலும் ஸ்ருதி ஹாசன் 61-வது இடத்திலும் முறையே இடம்பெற்றுள்ளனர். பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
0 comments:
Post a Comment