துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கொடி படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பொள்ளாச்சியில் தொடங்கியது. இந்நிலையில் இன்றுமுதல் இதன் படப்பிடிப்பில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டுள்ளார். இப்படத்தில் இவர் முதல்முறையாக வில்லி போன்றதொரு வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.
இதில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிப்ரவரி மாதம் வரை நடைபெறவுள்ளது அதன்பிறகு மற்றொரு நாயகியான ஷாம்லி இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இப்படத்தில் நடிகர் தனுஷ் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment