தமிழ் சினிமாவில் தன் படைப்புகளை வித்தியாசப்படுத்தி காட்டியவர் இயக்குனர் செல்வராகவன். இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு இவர் இயக்கிய படம் எதுவும் வெளியாகவில்லை. சிம்புவுடன் முதன்முறையாக இவர் கூட்டணி அமைத்த ‘கான்’ படமும் பாதியிலே நிற்கிறது.
எனவே, தன் தம்பி தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம் செல்வராகவன். இப்படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரியில் தொடங்க முடிவு செய்திருப்பதாக நெருங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செல்வராகவனின் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர்களே இதுவரை இசையமைத்து வந்தனர். இரண்டாம் உலகம் படத்திற்கு பின்னணி இசையை அனிருத் அமைத்தது தாங்கள் அறிந்ததே.
இந்நிலையில் தற்போது முதன்முறையாக செல்வராகவனின் இந்த புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். பிவிபி சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.
0 comments:
Post a Comment