நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் சகலகலாவல்லவன் என்று சொன்னால் அது மிகை ஆகாது காரணம் நல்ல நடிகர் மட்டும் இல்லை பாடலாசிரியார் பாடகர் தயாரிப்பாளர் இப்படி பன் முகங்களை கொண்டவர் தனக்கு என்ன கதையும் கதாபாத்திரமும் சரி சரியாக தேர்ந்து எடுப்பார், இதனால் தான் குறுகிய காலத்தில் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய பேர் எடுத்துள்ளார். சரி விஷயத்துக்கு வருவோம் .
நில் பட்டே சன்னட இந்தி மொழியில் அஷ்வினி ஐயர் இயக்கிய படம். இந்த படம் சைனா திரைப்பட விழாவில் விருது வென்ற படம். இந்த படத்தை தமிழில் தயாரிக்க உள்ளார் தனுஷ். இதுகுறித்து ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த மாதத்திற்குள் துவங்க உள்ளனர்.
அமலாபால், ரேவதி, சமுத்திரக்கனி இந்த படத்தில் நடிக்க உள்ளனர். ஹிந்தியில் இயக்கிய அஷ்வினி ஐயரே தமிழிலும் இயக்க உள்ளார். இந்த படம் அம்மா மகள் பாசத்தை கூறும் படம். படத்திற்கு ‘அம்மா கணக்கு’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘ஜிகர்தண்டா’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கேவ்மிக் யு ஆரி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.
0 comments:
Post a Comment