வெற்றிமாறனுடன் தனுஷ் இணைந்த பொல்லாதவன், ஆடுகளம் என்ற இரண்டு படங்களுமே வெற்றியாக அமைந்தன. ஆனால் அதையடுத்து ஒரே காம்பினேசன் வேண்டாம் என்று தனது மூன்றாவது படமான வடசென்னையை சிம்புவை வைத்து இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன்.
ஆனால் அந்த படம் தொடங்கப்படவேயில்லை. அதையடுத்து படம் இயக்குவதற்கு சில ஆண்டுகள் இடைவெளி கொடுத்த வெற்றிமாறன், இப்போது விசாரணை படத்தை இயக்கியிருக்கிறார். அட்டகத்தி தினேஷ், நடித்துள்ள இந்த படம் தற்போது உலகத்திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடசென்னை படத்தை தனுஷை வைத்து இயக்குவதாக ஏற்கனவே அறிவித்து விட்ட வெற்றிமாறன், அந்த படத்திற்காக சமந்தா உள்ளிட்ட சில முக்கிய நடிகர் நடிகைகளை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதோடு, தற்போது தனுஷ் கொடி படத்தில் நடித்து வரும் நிலையில், வடசென்னை வேலைகளையும் தொடங்கியிருக்கிறார் வெற்றிமாறன்.
ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து புதுப்பேட்டை பட சாயலில் உருவாகும் இந்த படத்தில் தனுஷை சிறிய பையான இருந்து டீன்ஏஜ் பையன், மெச்சூரிட்டியான மனிதர் என மூன்று தளங்களில் காண்பிக்கிறாராம் வெற்றிமாறன். அதனால் அதற்கான ஒத்திகைகளும் கொடி படப்பிடிப்புக்கிடையே நடத்தப்பட்டு வருகிறதாம். ஆக, கொடி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே வடசென்னை படப்பிடிப்பும் தொடங்கி விடும் என்கிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Top